மூச்சுக்கு 300 முறை தமிழக அரசு; இனி பயிற்சி தேவை - சர்ச்சை குறித்து விளாசிய அண்ணாமலை
ஆளுநர் ரவி வெளியேறிய நிலையில், அண்ணாமலை அவருக்கு ஆதரவாக அறிக்கை தெரிவித்துள்ளார்.
தலை நிமிருது தமிழகம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஆதி மனிதன் தமிழன் தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ் தேன்,… மூதறிஞர் ஒழுக்க நெறிகள் முதலில் கண்டதும் தமிழகம்தான்” என்று தமிழகம் என்ற தலைப்பிலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதை வரிகளை நினைவு கூர்ந்து,
நான் தமிழக அரசை கேட்கிறேன். ஆளுநர் தமிழகம் என்று சொன்னதால் என்ன தாழ்வு ஏற்பட்டுவிட்டது. ஆளுநர் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் சற்று முன்புவரை, திமுக தலைவர் முக.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தின் முகப்பிலே இருந்த வாசகம், “தலை நிமிருது தமிழகம், மனம் குளிருது தினம் தினம்”...
தமிழக அரசு
ஆனால் அவசர அவசரமாக இந்த வாசகத்தை மாற்றி “தைத்திங்களில் தமிழர் பெருமை” என்ற பொருளற்ற வாசகத்தை பொறுத்திருக்கின்றார்கள். ஆகாத மாமியாரின் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல கவர்னர் அவர்கள் எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும், எதிர்மறையாக பேச வேண்டும் என்பதை கண்மூடித்தனமாக செய்து கொண்டிருக்கும் தமிழக அரசு.
ஆளுநரின் தமிழகம் என்று சொல்லாடலை எதிர்த்து கிளர்ச்சி செய்வதில் வியப்பு ஒன்றும் இல்லை. திறனற்ற திமுக அரசு தன் குறைகளை எல்லாம் மறைக்க மக்களை திசை திருப்ப இப்படி உணர்வு ரீதியான பிரச்சனையை கிளப்புவது வாடிக்கையே. மூச்சுக்கு 300 முறை தமிழக அரசு, தமிழக அரசு என்று சொல்லிக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின்,
எல்லாம் நாடகம்
இனி தமிழக அரசு என்று சொல்லாமல் இருப்பதற்காக மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கும். திமுக அரசு தங்கள் கட்சியின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் அவர்கள் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
மொத்தத்தில், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே” என குறிப்பிட்டிருந்தார்.