சட்டப்பேரவையில் அத்து மீறிய ஆளுநர் : நன்றி சொன்ன அமைச்சர் உதயநிதி

DMK R. N. Ravi
By Irumporai Jan 09, 2023 11:00 AM GMT
Report

தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை சட்டப்பேரவையில் ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும் ஆளுநருக்கு உரையில் திராவிட மாடல் மற்றும் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டார் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆளுநர் சர்ச்சை

அதுமட்டுமில்லாமல், பேரவையில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் பேரவையில் இருந்து பாதியில் வெளியேறிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

இதனிடையே, அரசு தயாரித்த ஆளுநர் உரையில் தானாக சில விஷயங்களை தவிர்த்தும் சேர்த்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய நிலையில், உரையில் இல்லாத வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

சட்டப்பேரவையில் அத்து மீறிய ஆளுநர் : நன்றி சொன்ன அமைச்சர் உதயநிதி | Thanks To The Chief Minister Udayanidhi Stalin

உதயநிதி நன்றி

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக, அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏறவேண்டுமென, முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற மரபை காத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.