இந்திய கிக்கெட் வீரர் சாஹலுக்கு விவாகரத்தா? அவரே சொன்ன ஸ்டேட்மெண்ட்!

Cricket Gossip Today Yuzvendra Chahal
By Sumathi Aug 19, 2022 10:55 AM GMT
Report

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மனைவியுடனான விவாகரத்து குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் டிசம்பர் 2020ல் தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்தார். சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீயும் ஒன்றாக வெளியிடும் ஷார்ட் வீடியோக்கள் இணைய உலகை கலக்கி வருகிறது.

இந்திய கிக்கெட் வீரர் சாஹலுக்கு விவாகரத்தா? அவரே சொன்ன ஸ்டேட்மெண்ட்! | Yuzvendra Chahal Wife Dhanashree Verma Rumours

இதனிடையே, சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக சமீப காலமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதனை தற்போது மறுத்துள்ளார் சாஹல்.

யாரும் நம்ப வேண்டாம்

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய கிக்கெட் வீரர் சாஹலுக்கு விவாகரத்தா? அவரே சொன்ன ஸ்டேட்மெண்ட்! | Yuzvendra Chahal Wife Dhanashree Verma Rumours

தயவுசெய்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அனைவருக்கும் அன்பும் வெளிச்சமும் கிடைக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சாஹல் மனைவி தனஸ்ரீ வர்மா ஒரு யூடியூபர். மேலும் டான்சராகவும் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமூக வலைதள ஃபாலோவ்ர்ஸ் அதிகம்.