சாதனை படைக்க காத்திருக்கும் யுஸ்வேந்திர சாஹல் - என்ன தெரியுமா?
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சாதனை ஒன்றை படைக்க காத்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில் டி20 தொடரையும் கைப்பற்ற இந்திய அணி தயாராகி உள்ளது. இதேபோல் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சாதனை ஒன்றைப் படைக்க காத்துக் கொண்டுள்ளார்.
இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியில் அவர் இடம்பெறாத நிலையில், இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் இலங்கை அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமைக்கு சாஹல் சொந்தக்காரர் ஆவார்.
டி20 போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், அதில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டனை பின்னுக்குத் தள்ளி அவர் இப்பட்டியலில் முதலிடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
