இவரால மட்டும் தான் என்ன மாதிரி நடிக்க முடியும் - யுவராஜ் சிங் சொல்வது இந்த நடிகரையா..?
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் தனது வரலாற்றுப் படத்தில் நடிக்கச் சிறந்த நடிகர் யார் என்பதை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
யுவராஜ் சிங்
2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்கு அளித்தவர் யுவராஜ் சிங் .6 பந்துகளுக்கு 6 சிக்சர் சாதனை போன்ற பல புகழ்களுக்கு சொந்தக்காரரான யுவராஜ் சிங், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 14, 528 ரன்களை குவித்துள்ளார்.
கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு பிறகு, அதிலிருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பிய இவர், 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இவர் தான் ஹீரோ
இவரது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்குவதற்கு பாலிவுட்டில் தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது உள்ள ஹீரோக்களில் யார் உங்கள் வேடத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்வி யுவராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு சமிபத்தில் 'அனிமல்" திரைப்படத்தை பார்த்ததாக குறிப்பிட்டு, அப்படத்தில் ரன்பீர் கபூரின் நடிப்பை கண்டதிலிருந்து தனது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப்பட்டால் ரன்பீர் கபூர் பொருத்தமாக இருப்பார் என்று தெரிவித்தார்.