பண மோசடி வழக்கு - எம்.எஸ். தோனி மீது நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்..?
பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார்
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரரான மிஹிர் திவாகர் மற்றும் அவரது மனைவி சௌமியா தாஸ் அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.
புகாரில், மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோரின் நிறுவனமான ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் (Arka Sports Management) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தோனி இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் கிரிக்கெட் அகாடமிகளை நிறுவுவதற்கு கைழுத்திட்டுள்ளார்.
அதில் தான் ஏமாற்றப்பட்டதாக தோனி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தான், இது குறித்த அவமதிப்பு வழக்கை Arka Sports Management தொடுத்துள்ளது.
அவதூறு வழக்கு
இது குறித்து பேசிய மிஹிர் திவாகர், நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்பே, தோனியின் வழக்கறிஞர் தயானந்த் ஷம்ரா பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தங்கள் நிருவனத்தின் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் என்றும் அதனை எதிர்த்து தான் வழக்கு தொடர்ந்து இருப்பதாக கூறினார்.
இந்த வழக்கின் மீதான் விசாரணை வரும் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க, சென்னை அணியின் கேப்டன் தோனி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.