IPL 2024- Impact Player - "தல" எம்.எஸ்.தோனி போடும் Sketch..?

Karthick
in கிரிக்கெட்Report this article
CSK அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி வரும் ஐபிஎல் 2024 சீசனுக்காக புதிய முயற்சியை கையாளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2024
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி தற்பொதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டும் சென்னை அணியின் கேப்டன் MS தோனி களமிறங்குவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை ரசிகர்கள் அவரை காண ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில் தான் புதிய Stratergy'யாக வரும் 2024 ஐபிஎல்'லில் Impact வீரராக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Impact Player'ஆ.?
இம்பாக்ட் வீரர் முறையில் பௌலிங்கின் போது, களத்தில் விக்கெட் கீப்பராகவும் பேட்டிங்கின் போது தோனிக்கு பதிலாக வேறொரு வீரர் களமிறங்க வழிவகுக்கும். முன்னதாக தோனிக்கு ஏற்கனவே காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது.
தற்போது அவருக்கு ஏற்ப்பட்டுள்ள முழங்கால் வலியால் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் குறைந்த அளவிலான ரன்களையே தோனியால் எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.