யுவன் ஒரு ஃப்ராடு.. அதெல்லாம் காப்பி - வசமாக சிக்கிய லவ் டுடே பிரதீப் ரங்கநாதன்!
பிரதீப் ரங்கநாதன், யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்ட போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
பிரதீப் லீக்ஸ்
கல்பாத்தி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் லவ் டுடே. இந்தப் படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. இதுவரை ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல் செய்து அசத்தி வருகிறது.
இந்தப் படத்தை கோமாளி புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அவரின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருந்தது.
யுவன் சர்ச்சை
இந்நிலையில், பிரதீப் அவரது முகநூல் பக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் யுவனை குறிப்பிட்டு, யுவன் ஒரு தண்டம், ஃப்ராடு என திட்டி பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் அவரை கடுமையாக விளாசி வருகின்றனர்.
மேலும், யுவனின் மங்காத்தா பின்னணி இசை காப்பியடிக்கப்பட்டது என்ற யூடியூப் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதில் இவர் வீட்டில் யுவன் புகைப்படம் மாட்டப்பட்டிருப்பதும், பட வெற்றிக்குப் பின் யுவன் என் படத்திற்கு இசையமைப்பார் என நான் கனவில் கூட நினைத்ததில்லை என பிரதீப் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், சச்சின் ஒரு சுயநலவாதி என ஆபாச வசனத்தால் எல்லாம் திட்டித் தீர்த்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பல கண்டனங்கள் எழுந்து வருகிறது.