ராசியில்லை.. ரொம்பவே ஸ்ட்ரெஸ்.. அப்போ அஜித்தான் அதை செய்தார் - ஓப்பனாக சொன்ன யுவன்!
யுவன் சங்கர் ராஜா அஜித் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
யுவன்
தமிழ் சினிமாவில் தனது இசையினால் தனக்கென ஒரு மாபெரும் இடத்தை பிடித்திருப்பவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவரது இசையமைப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. விஜய் படத்துக்கு பல வருடங்கள் கழித்து இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நல்ல இசையைத்தான் கொடுத்தேன். ஆனால் படம் சரியாக போகவில்லை.
அஜித்
என்னை ராசியில்லாத இசையமைப்பாளர் என்று சொன்னார்கள். எனக்கோ, நான் நன்றாகத்தானே வேலை செய்தேன். பிறகு ஏன் இப்படி சொல்கிறார்கள். பாடல்களும் நல்ல ஹிட்தானே என்று ரொம்பவே ஸ்ட்ரெஸ் ஆனேன். அந்த சமயத்தில்தான் அஜித் எனது வீட்டுக்கு வந்து,
'யுவன் நான் நடிக்கும் தீனா படத்துக்கு நீதான் இசையமைக்க வேண்டும்' என்று சொன்னார். பிறகு அந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகி எனக்கு வரிசையாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன" என்று தெரிவித்துள்ளார்.