தனுஷ் ஆட, சிம்பு பாட.. - யுவன் பிறந்த நாளில் களைகட்டிய கொண்டாட்டம்! ரசிகர்கள் உற்சாகம்!

party simbu dhanush participate yuvan bdy
By Anupriyamkumaresan Aug 31, 2021 06:53 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நடந்த பார்ட்டியில் நடிகர் சிம்பு, தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்று ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

இசையமைப்பாளர் என்னும் மகுடத்தை அணிந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு வீற்றிருப்பவர் தான் யுவன சங்கர் ராஜா. 90’ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் ரசனைகளுக்கு பாரபட்சம் பார்ப்பதில்லை யுவனின் இசைக்கருவிகள்.

தனுஷ் ஆட, சிம்பு பாட.. - யுவன் பிறந்த நாளில் களைகட்டிய கொண்டாட்டம்! ரசிகர்கள் உற்சாகம்! | Dhanush Simbu Participate In Yuvan Bdy Party Fun

இவர் அனைவருக்குமான இசையமைப்பாளர். பெரிய பட்ஜெட் படங்களோ, அறிமுக இயக்குநர் படங்களோ எதுவாக இருந்தால் என்ன யுவனுக்கு பிடித்தால் செய்துவிடுவாராம்.

இளைய ராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா இன்று தனது 42 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் இவரின் பிறந்த நாளை ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு யுவன் பிறந்த நாள் பார்ட்டி கொடுத்துள்ளார்.அப்போது அவர் கேக் வெட்டிய வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த பார்ட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் சிம்பு, தனுஷ், பாடகி தியா, அறிவு உள்ளிட்டோர் செய்த ரகளைகள், இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் பார்டியில் தியா மற்றும் அறிவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதே போல மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் நடிகர் சிம்பு இருவரும் பர்த்டே பாய் யுவனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.

இது தவிர பர்த்டே பார்ட்டியில் நடிகர் தனுஷ் யுவன் மற்றும் தியாவுடன் இணைந்து ரவுடி பேபி பாடலை பாடியுள்ளார். அதே போல நடிகர் சிம்பு “லூசு பெண்ணே பாடலை” பாடி வேற லெவல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து பர்த்டே பேபி யுவன் சங்கர் ராஜா கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.