பைலட் ஆக ஆசைப்பட்டேன்; இசையமைப்பாளராக காரணமே இதுதான் - மனம் திறந்த யுவன்
இசையமைப்பாளர் ஆன பின்னணி குறித்து யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
1997 ஆம் ஆண்டு வெளி வந்த அரவிந்தன் என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் பின் இவர் இசையமைத்த பல பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
பைலட் ஆக ஆசை
யுவன் சங்கர் ராஜா பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் ஆவார். இந்நிலையில் தான் இசை துறைக்கு வந்தன் பின்னணி குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய அவர், "எனக்கு சிறு வயதில் இசை மீது பெரிதாக ஆர்வம் இல்லை. பைலட்டாக வேண்டும் என்றுதான் ஆசைபட்டேன். அந்த சமயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்த துவங்கினார். எங்கு திரும்பினாலும் ஏ.ஆர் ரஹ்மானின் இசைதான் ஒலித்துக்கொண்டிருந்தது.
பள்ளிக்கு செல்லும்போது என் நபர்கள் சிலர், "இனி இளையராஜா எல்லாம் கிடையாது, ஏ.ஆர் ரஹ்மான் தான்" என கூறினார்கள். அன்று இரவுதான் நான் இசையமைப்பாளராகவேண்டும் என முடிவு எடுத்தேன்" என கூறினார்.