பிடிக்கவில்லை?இளையராஜா என் கல்யாணத்துக்கு இதனால்தான் வரல - மனம் திறந்த யுவன்!
பல சுவாரஸ்யமான விஷயங்களை யுவன் பகிர்ந்துள்ளார்.
மதம் மாற்றம்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது ஜஃப்ரூன் நிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஜஃப்ரூன் நிஷா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், யுவன் இஸ்லாத்திற்கு மதம் மாறினார்.
முன்னதாக, யுவன் சங்கர் ராஜா 2 முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர். அவர் இஸ்லாத்திற்கு மாறியது தந்தையான இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் திருமணத்திற்கு செல்லவில்லை என அப்போது பல செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் தகவல் தெரிவித்துள்ள யுவன், நான் மதம் மாறியபோது அப்பா என்னைத் தடுக்கவில்லை. மாறாக அவர் கூறியது, தினமும் ஐந்து முறை கடவுளைத் தொழுகின்றேன் எனக் கூறுபவனை ஏன் தடுக்க வேண்டும் என்றுதான் கூறினார்.
இளையராஜா ரியாக்ஷன்
மேலும் எனது திருமணம் திடீரென நடைபெற்றது. நான் இன்று கிளம்பி ஊருக்குப் போகின்றேன், அடுத்த நாள் திருமணம் என முடிவாகிவிட்டது. நான் உடனே அப்பாவுக்கு போன் செய்து விவரத்தைச் சொன்னேன். உடனே அவர் கூறியது, " நான் கல்யாணத்திற்கு வந்துவிடுவேன்.
அதில் எனக்கு எந்த சிரமும் இல்லை. ஆனால் நான் வருவதால் திடீர் ஏற்பாடுகளை செய்து கல்யாணத்தில் அனைவரும் என்னை கவனிக்க வேண்டும் என்ற நெருக்கடியை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் நல்லபடியாக கல்யாணம் செய்துட்டு வாங்க. நான் அங்கு வந்து, என்னால் அங்கிருப்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கு" எனக் கூறினார்.
அதன் பின்னர் நானும் எனது மனைவியும் அப்பாவைப்போய் பார்த்தோம். மேலும் இப்போதுவரை அப்பா மிகவும் அன்பாகவே எங்களுடன் இருக்கின்றார் எனத் தெரிவித்துள்ளார்.