விஜய் கட்சி மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன தகவல்
10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா
கோவையில் கொடிசியா மைதானத்தில் வரும் அக்டோபர் 12ஆம் தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி (live in concert) நடைபெற உள்ளது.
இது தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்களுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
AI தொழில்நுட்பம்
அப்போது பேசிய அவர், இன்னும் 10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது. AI தொழில்நுட்பத்தை கையாள தெரிந்தவர் அதிக சம்பாதிக்க முடியும் என பேசினார். மேலும், மனிதனால் ஏற்படுத்தக்கூடிய உணர்வை AI யால் ஏற்படுத்த முடியாது என்ற ஏ.ஆர்.ரகுமானின் கருத்தும் உண்மைதான் என தெரிவித்துள்ளார்.
கோவையில் முதல் முறையாக 360 டிகிரி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், டிக்கெட் கட்டணம் 500 முதல் 25,000 விலையில், 20 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விஜய் மாநாடு
விஜய் கட்சி மாநாட்டிற்கு பாடல் அமைத்து தருவீர்களா என்ற கேள்விக்கு கேட்டால் கண்டிப்பாக பண்ணிடுவேன் என தெரிவித்துள்ளார்.
விஜய் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார்.