இதுல கூடவா பிரச்சாரம்..? மிரளவைக்கும் ஆந்திர அரசியல் கட்சிகள்..!
ஆந்திர மாநிலத்தில் இந்த வருடம் ஒரே நேரத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆந்திர அரசியல்
ஆந்திர மாநிலத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளது.
பெரும் பரபரப்பை எட்டியுள்ள அரசியல் நகர்வுகளில், தேர்தலை சந்திக்க ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மற்றும் தெலுங்கு தேச கட்சி போன்றவை மும்முரமாக தயாராகி வருகின்றன.
கூட்டணி அமைத்து போட்டியிட இரு கட்சிகளும் பெரும் முயற்சிகளை கொண்டு வரும் சூழலில், பிரச்சாரத்தையும் கட்சிகள் முன்னெடுத்துள்ளன.
ஆணுறையில் கூட...
அப்படி ஒரு முன்னெடுப்பு தான் தேசிய அளவில் வைரலாகி உள்ளது. யாரும் எதிர்பார்த்திராத வகையில் வித்தியாசமாக ஆணுறை பாக்கெட்டை பிரச்சார கருவியாக எடுத்துள்ளது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள்.
கட்சிகளின் சார்பில் விநியோகிக்கப்படும் ஆணுறையில் இரு கட்சிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருப்பது விவகாரமான விஷயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.