44 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் - வீட்டை விட்டு ஓடிய 16வயது சிறுமி! ஏன்?

Youtube Madhya Pradesh
By Sumathi Sep 11, 2022 02:05 PM GMT
Report

வீட்டை விட்டு வெளியேறிய யூடியூபரான 16 வயது சிறுமி மீட்கப்பட்டார்.

யூடியூபர்

மகாராஷ்டிரா, அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் காவ்யா(16). இவர் பிந்தாஸ் காவ்யா என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோக்களை அதிக அளவில் வெளியிட்டு புகழ் பெற்றார்.

[XVNJX

பின்னர் யூடியூப் சேனலை கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பித்து தற்போது 44 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். இவர் யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தார். இந்நிலையில் திடீரென நேற்று முன் தினம் தன் பெற்றோருடன் காவ்யா சண்டைபோட்டார்.

16வயது சிறுமி

காவ்யாவை அவர் தந்தை ஏதோ திட்டியதாக தெரிகிறது. உடனே வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து காவ்யாவை தேடி வந்தனர்.

அவுரங்காபாத்திலிருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனையிட உத்தரவிடப்பட்டது. அவர் புகைப்படமும் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அவரது யூடியூப் சேனலில் அவர் தந்தை நேரடியாகப் பேசினார்.

மீட்பு

காவ்யாவை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடிக்க உதவும்படியும் அதில் பேசியிருந்தார். பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார். இந்நிலையில், புஷாவல் ரயில் நிலையத்திலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது ஸ்லீப்பர் பெட்டியில் காவ்யா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் இதர்சி ரயில் நிலையத்தில் வண்டி வந்தபோது நடத்தப்பட்ட சோதனையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். தொடர்ந்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.