என்னை மன்னித்துவிடுங்கள்..கதறும் TTF வாசன்..விரைவில் கைதாகிறாரா?
கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பெரிதளவில் பேசப்படுபவர் TTF வாசன். யூடியூபரான இவர், தனது உயர் ரக பைக்கில் டிராவல் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இவரை கிட்டத்தட்ட 28 லட்சம் பேர் யூடியூபில் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாட முடிவு செய்த இவர் கோயம்புத்தூரில் தனது யூடியூப் சொந்தங்களுடன் ஒரு மீட் அப் வைத்திருந்தார்.
அதில் எதிர்பாராத விதமாக ஆயிரக்கணக்கானோர் கூடிவிட்டனர். அந்த மீட் அப் தான் TTF வாசனை பெரிதளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
பைக்கில் அதிவேகம்
இப்படி 2k கிட்ஸ் மத்தியில் பெரிய செலிபிரிட்டியாக வளம் வரும் TTF வாசன், தனது பைக்கில் 238 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வீடியோவை பதிவிட்டிருந்தார்,
அதனை ஒரு நபர் சென்னை காவல்துறையினரை டாக் செய்து, 240+km/ மணிக்கு வேகத்தில் பைக்கை ஓட்டி யூடியூப்பில் பதிவிடுவது.
நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது மற்றவர்களையும் செய்ய தூண்டும், என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
தற்போது இந்த பதிவுக்கு சென்னை காவல்துறை, 'It is noted', என பதிலளித்துள்ளது. காவல்துறையின் இந்த பதிவுக்கு TTF வாசனுக்கு சாதகமாகவும் அவரை கிண்டல் செய்தும் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே அவர் குறித்து செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றனர்.அவர் எப்போது வேண்டுமானலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கதறும் TTF வாசன்
இந்நிலையில் வாசன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “கடந்த சில நாள்களாக என்னை பற்ற எதிர்மறையாக பேசுகிறார்கள். என்ன நடக்கிறதென்று தெரியவில்லை.
பைக்கை வேகமாக ஓட்டுங்கள் என்று நான் யாரையும் ஊக்கப்படுத்தவில்லை. ஒருவேளை அவ்வாறு நான் ஊக்கப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.
240 கி.மீ வேகத்தில் சென்றது பைக்கின் செயல்திறனை சோதிப்பதற்காக மட்டும்தான். ஆனால் சில செய்தி சேனல்கள் என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கின்றனர்” என்று கூறியிருக்கிறார்.