திருமணமாகி சில மணி நேரம் தான் - மனைவியை கொடூரமாக தாக்கிய பிரபல யூடியூபர்!

Uttar Pradesh Crime
By Sumathi Dec 24, 2023 10:07 AM GMT
Report

பிரபல யூடியூபர் மனைவி செவிடாகும் வகையில் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு 

நொய்டாவில் வசித்து வருபவர் விவேக் பிந்திரா(41). தன்னம்பிக்கை பேச்சாளராக ஆசிய அளவில் விருது பெற்றவர். 9 கின்னஸ் சாதனைகள் உட்பட 11 உலக சாதனைகளையும் பெற்றுள்ளார்.

youtuber-vivek-bindra

அண்மையில் திருமணம் முடித்த இவர், அவரது தாய் மற்றும் மனைவியை தாக்கியதாக புகாருக்கு ஆளாகியுள்ளார். குடும்பச்சொத்து தொடர்பான தகராறில் தாய் பிரபாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் தாயை தாக்கியதில் மனைவி அதனை தடுக்க முயன்றுள்ளார்.

உலகின் பணக்கார யூடியூபர்; கோடிகளில் வருமானம் பெரும் இந்திய பெண் - எவ்வளவு தெரியுமா?

உலகின் பணக்கார யூடியூபர்; கோடிகளில் வருமானம் பெரும் இந்திய பெண் - எவ்வளவு தெரியுமா?

கொடூரத் தாக்குதல்

உடனே, மனைவி மீது ஆத்திரமடைந்த விவேக் தனியறைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார். மனைவி யானிகாவின் செல்போனையும் உடைத்துள்ளார். அதனால், சில தினங்களுக்குப் பிறகே யானிகாவின் சகோதரர் வைபவ் குவாத்ராவுக்கு இந்த விவகாரம் தெரியவந்துள்ளது.

திருமணமாகி சில மணி நேரம் தான் - மனைவியை கொடூரமாக தாக்கிய பிரபல யூடியூபர்! | Youtuber Vivek Bindra Beaten Wife Noida

அதனையடுத்து, இதுகுறித்து போலீஸில் புகாரளித்துள்ளார். மேலும், யானிகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, விவேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பரிசோதனையில் யானிகாவின் ஒரு காது கேட்காது போனது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.