ஆர்டர் செய்த உணவில் சாப்பிட்டு போட்ட எச்சில் எலும்பு - கொந்தளித்த நபர்!
புதுச்சேரி வில்லியனூரில் இர்ஃபான் என்ற அசைவ உணவகம் இயங்கி வருகிறது.
பிரபல ஹோட்டல்
யூடியூபர்கள் மத்தியில் பிரபலம். யூடியூப்பில் வெளியிடப்பட்ட பல்வேறு உணவு வீடியோக்களை பார்த்து மக்கள் குவிய தொடங்கியுள்ளனர். தற்போது இந்த உணவகம், எந்த யூடியூபர்களால் மிகவும் பிரபலம் ஆனதோ, அதே யூடியூபர்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் ஒரு யூடியூபர் கடைக்கு வந்து ரிவியூ செய்வதற்காக பெப்பர் சிக்கன் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் பெப்பர் சிக்கன் சூடாக இல்லை, அளவும் குறைவு, சரி பரவாயில்லை என்று சாப்பிட்டார். அதில் ஒரு எழும்பு மட்டும்தான் இருந்துள்ளது. ஒரு பீஸ்கறி எதுவும் இல்லை.
அதிகாரிகள் ஆய்வு
அந்த எழும்பு யாரோ பிரியாணியில் சாப்பிட்டு போட்டு சென்ற எச்சில் எழும்பு போல் இருந்ததால் கோபமடைந்துள்ளார். இதனால் அவர் வெளியிட்ட வீடியோ வேகமாய் பரவியது. இதனை பார்த்த புதுச்சேரி உணவு பதுகாப்பு அதிகாரிகள் இர்ஃபான் உணவகத்திற்கு சென்று சமையல் கூடத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த தக்காளி சாஸ், சிக்கன், புரோட்டாவை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கெட்டுப்போயிருந்த தக்காளி சாஸ் பாட்டிலை எடுத்து கீழே கொட்டச் செய்துள்ளனர்.
ஆனால் கெட்டுப்போன பொருட்கள் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.