நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை : காரணம் என்ன ?
நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
அம்மன் உணவகம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார்.
இதற்கு அப்பகுதியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனால் உணவகத்தை விரிவுபடுத்த எண்ணிய சூரி , அம்மன் உயர்தர சைவ உணவகம் மற்றும் அய்யன் உயர்தர அசைவ உணவகம் ஆகிய இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவங்கினார்.
ஜிஎஸ்டி புகார்
இந்நிலையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வணிகவரித்துறையினர் நடத்திய சோதனையில், ஜிஎஸ்டி செலுத்தாதது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூல் என புகார் எழுந்த நிலையில் சோதனை நடைபெற்றது. இதுகுறித்து 15 நாளில் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மதுரை மண்டல வணிக வரித் துறைஉத்தரவிட்டுள்ளது.