மீண்டும் மீண்டுமா? கைதான TTF வாசன் - மதுரையில் காவல் துறையினர் அதிரடி
பிரபல யுடியூபரான டிடிஎஃப் வாசன் மதுரை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
TTF வாசன்
பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ஊர் ஊராக விலை உயர்ந்த பைக்குகளில் பயணம் செய்து அந்த அனுபவங்களை Twin Throttlers என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார்.
அதிவேகமாக பைக்கை ஓட்டி தற்போதையை இளைஞர்களை அதிகமாக கவர்ந்துள்ள இவர், விரைவில் மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாவுள்ளார். தொடர்ந்து பைக் சாகசம் செய்து வரும் இவர் அவ்வப்போது அதன் காரணமாக சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.
கைது செய்த போலீஸ்
சில மாதங்களுக்கு ,முன்பு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தின் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி இருக்கின்றார்.
இந்த விபத்தில் இவருக்கு கை எலும்பு முறிந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு பின்னர், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றி ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்தான வீடியோ ஒன்றும் சமுகவலைதளபக்கத்தில் வெளியாக இது குறித்து பாலுசெட்டி சாத்திரம் காவல் துறையினர், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருந்தனர்.
அவ்வழக்கில் இருந்து வெளியில் வந்த வாசன், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, வண்டியூர் டோல்கேட் அருகே காரை ஓட்டியபடியே செல்போனில் பேசிகொண்டு எடுத்த வீடியோவை தனது YOUTUBE சேனலில் வாசன் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக மதுரை ஆயுதப்படை சார்பு ஆய்வாளரான சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் வாசன்.