பிரபல யூடியூபர் 'சவுக்கு சங்கர்' அதிரடி கைது - சைபர் கிரைம் போலீசார் ஆக்ஷன்!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுக்கு சங்கர்
தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர் அரசியல் விமர்சகர் மற்றும் யூடியூபரான சவுக்கு சங்கர். குறிப்பாக திமுக அரசின் செயல்பாடுகளையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதியை குறிவைத்து தனது சவுக்கு மீடியா மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும், பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு அவர் பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் திட்டம்
தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், அவரை கோவை அழைத்துவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சவுக்கு மீடியாவில் இருப்பவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சவுக்கு சங்கரும் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.