பிரபல யூடியூபர் தவறான செய்தியை வெளியிட்டதால் 8 ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றன் அதிரடி!
யூடியூபர் ஒருவர் தவறான செய்தியை பரப்பியதால் சிறை தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபர்
தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ். 38 வயதான இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார், அதில் இவர் வீடியோக்கள் பதிவேற்றம் செய்துவருகிறார். இவர் கடந்த சில தினங்களாக ரஷ்ய ஹைவே பேட்ரோல் போலீஸார் சட்டத்தை மீறுவதாகக் கூறி சில வீடியோ பதிவுகளை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ரஷ்யா - உக்ரைன் யுத்தம் தொடர்பான போலி புகைப்படம் ஒன்றை நோஸ்ட்ரினோவ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததாகக் கூறி போலீஸார் அவரை கைது செய்தனர்.
நீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில், நோஸ்ட்ரினோவின் மனைவி எகட்டெரினா, அப்படியான புகைப்படம் எதையும் நோஸ்ட்ரினோவ் பகிரவில்லை என்றும், இது அவரை பழிவாங்கும் நோக்கில் போலீஸாரால் வேண்டுமென்றே போடப்பட்ட வழக்கு என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த சூழலில் இந்த வழக்கை நேற்று விசாரித்த கிராஸ்னோடர் நீதிமன்ற நீதிபதி, நோஸ்ட்ரினோவ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு எட்டு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார்.