எல்லாத்துலேயும் மதம், வெறுப்பை கக்கற..நெட்டிசனை கிழித்த யூடியூபர் இர்ஃபான்!

Youtube Viral Video Social Media
By Swetha Apr 26, 2024 08:27 AM GMT
Report

நெட்டிசன் ஒருவரது இஸ்லாம் மத வெறுப்பு கமன்டுக்கு கடுப்பான இர்ஃபான் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

யூடியூபர் இர்ஃபான் 

தமிழ் யூடியூபர்களில் மிகவும் பிரபலாமானவர் இர்ஃபான். ரோட்டுக்கடை முதல் பிரபல நட்சத்திர ஹோட்டல் உணவகங்கள் வரை சுவையான உணவுகளை சுவைத்து தனது யூ-ட்யூப் சேனலில் அது குறித்த வீடியோக்களை வெளியிடுவார். இவரது சேனலை மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸ் இறுகின்றனர்.

எல்லாத்துலேயும் மதம், வெறுப்பை கக்கற..நெட்டிசனை கிழித்த யூடியூபர் இர்ஃபான்! | Youtuber Irfan In Trouble

இவரது உணவு விடியோக்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது அவர் பிரபலங்களுடன் உரையாடி பட புரோமோஷன் வீடியோக்களையும் செய்து வருகிறார். இது மட்டுமல்லாமல் அவருக்கு அண்மையில் ததிருமணம் ஆகியது.

அதில் இருந்து தனது மனைவியுடன் அவர் வெளியிடும் சமையல் வீடியோக்களுக்கும் அதிக வரவேற்பு உள்ளது.இதற்கிடையில் அவர் விஜய் டிவியின் மெகா ஹிட் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்கிறார்.

யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி, காருக்குள் ஒளிந்திருந்த இர்பான் - விசாரணையில் அம்பலம்!

யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி, காருக்குள் ஒளிந்திருந்த இர்பான் - விசாரணையில் அம்பலம்!

மத வெறுப்பு

இந்த நிலையில், அவர் பதிவிட்ட ’பிஸ்மில்லா பீஃப் பிரியாணி’ என்ற கடையின் உணவு ரிவிவ்யூ வீடியோவின் கீழ் ஒருவர், "இர்ஃபான் எப்போதுமே இஸ்லாம் கடைகளை மட்டும்தான் புரோமோட் செய்கிறார் என்றும் மற்ற கடைகளை அவர் புரோமோட் செய்வதில்லை" என்று கமன்ட் செய்திருந்தார்.

எல்லாத்துலேயும் மதம், வெறுப்பை கக்கற..நெட்டிசனை கிழித்த யூடியூபர் இர்ஃபான்! | Youtuber Irfan In Trouble

இதற்கு கடுப்பான இர்ஃபான், "என் மதம் சார்ந்த கடைகளை மட்டும் இல்லை டிஃபின் சாஸ்த்ரா, மாப்பிளை ரெஸ்ட்டாரன்ட் என மற்ற கடைகளையும் நான் புரோமோட் செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், இந்த வீடியோவில் மட்டும் இப்படி ஒரு கமென்ட்.

பிரச்சினை என்கிட்ட இல்லை. எல்லா விஷயத்துலேயும் மதம், வெறுப்பை கக்கற உன்கிட்ட தான் பிரச்சினை" என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக நிறைய மதம் சார்ந்து வெறுப்புகள் வருகிறது என்றும் தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார் இர்ஃபான்.