இர்ஃபான் உதயநிதியோட நண்பர் - அதனால தான் கேஸ் இல்லை - ஜெயக்குமார் ஆவேசம்!!
யூடியூபர் இர்ஃபான்
தமிழ்நாட்டில் பிரபல யூடியூபராக இருப்பவர் இர்ஃபான். இவர் இர்ஃபான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார், அதில் இவருக்கு சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
இவர் இந்த யூடியூப் சேனனில் புட் விலாக் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். மேலும், இவர் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் உடன் இணைந்து வீடியோ எடுத்து போட்டுள்ளார்.
இவருக்கு ஹசீஃபா என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், பல திரை துறை நட்சத்திரங்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிலையில், தான் சமீபத்தில் இர்ஃபான் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
குழந்தையின் Gender Reveal வீடியோ - 7 ஆண்டுகள் வரை சிறைக்கு போகலாம் - யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!
துபாய்க்கு தம்பதியினர் சென்றுள்ள நிலையில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி அங்கு தெரிந்து கொண்டது மட்டுமின்றி அதனை நண்பர்களுடன் அவர் கொண்டாடினர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவத்துறை காவல் துறை தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டது. பிரச்சனை பெரிதாவதை உணர்ந்தவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டது மட்டுமின்றி, தன்னுடைய இன்ஸ்டா வீடியோவையும் டெலீட் செய்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் பேசும் போது, இர்ஃபான் திமுக அமைச்சர் உதயநிதியின் நண்பர் என்று கூறிய ஜெயக்குமார் திமுகவை சேர்ந்தவர்கள், அவர்களது நண்பர்கள் என்ன செய்தாலும் பெரிதாக நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றம் சாட்டினார்.