Sunday, May 11, 2025

குழந்தையின் Gender Reveal வீடியோ - 7 ஆண்டுகள் வரை சிறைக்கு போகலாம் - யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!

Pregnancy
By Karthick a year ago
Report

யூடியூபர் இர்ஃபான்

தமிழ்நாட்டில் பிரபல யூடியூபராக இருப்பவர் இர்ஃபான். இவர் இர்ஃபான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார், அதில் இவருக்கு சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

gender reveal video youtuber irfan in trouble

இவர் இந்த யூடியூப் சேனனில் புட் விலாக் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். மேலும், இவர் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் உடன் இணைந்து வீடியோ எடுத்து போட்டுள்ளார்.

இவருக்கு ஹசீஃபா என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், பல திரை துறை நட்சத்திரங்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை

இந்நிலையில், தான் சமீபத்தில் இர்ஃபான் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். துபாய்க்கு தம்பதியினர் சென்றுள்ள நிலையில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி அங்கு தெரிந்து கொண்டது மட்டுமின்றி அதனை நண்பர்களுடன் அவர் கொண்டாடியுள்ளார்.

எப்பப்பாரு இதே பிரச்சனை, யூடியூபர் இர்ஃபான் புலம்பல் - தமிழக அரசு பதில் டுவீட்!

எப்பப்பாரு இதே பிரச்சனை, யூடியூபர் இர்ஃபான் புலம்பல் - தமிழக அரசு பதில் டுவீட்!


இந்த வீடியோ தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இந்தியா நாட்டை பொறுத்தவரையில் பிறக்க இருக்கும் குழந்தையின் பாலினத்தை கருவிலேயே அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும்.


இந்த சூழலில், இர்ஃபான் வெளியிட்ட வீடியோவில் நிலையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் நபர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை என்பது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது