எப்பப்பாரு இதே பிரச்சனை, யூடியூபர் இர்ஃபான் புலம்பல் - தமிழக அரசு பதில் டுவீட்!
பிரபல யூடியூபர் இர்ஃபான் புலம்பியபடி டுவீட் போட்டதற்கு தமிழக அரசு சார்பாக பதிலளித்துள்ளார்.
யூடியூபர் இர்ஃபான்
தமிழ்நாட்டில் பிரபல யூடியூபராக இருப்பவர் இர்ஃபான். இவர் இர்ஃபான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார், அதில் இவருக்கு சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் இந்த யூடியூப் சேனனில் புட் விலாக் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.
மேலும், இவர் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் உடன் இணைந்து வீடியோ எடுத்து போட்டுள்ளார். இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆனது, இவரது திருமணத்திற்கு பல பிரபலங்கள் சென்று கலந்துகொண்டனர்.
டுவீட்
இந்நிலையில், இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், " கரண்ட் எப்பவாது கட் பண்ணலாம், எப்பவுமே கட் பண்ணினா எப்படி? நேற்று முழு நாள் கரண்ட் இல்லை, இன்றும் 2 மணிநேரம் கரண்ட் இல்ல. கால் பண்ணாலும் செக் பண்ணமாற்றங்க" என்று பதிவிட்டு TANGEDCO (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) இதனை டேக் செய்திருந்தார்.
Apologies, we have forwarded your complaint to our concerned division for early action.
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) July 15, 2023
இதற்கு தமிழ்நாடு சார்பில் "மன்னிக்கவும், உங்கள் புகாரை முன்கூட்டியே நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அனுப்பியுள்ளோம்" என்று பதில் டுவீட் செய்துள்ளனர். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.