பாரம்பரிய மயில் கறி..செய்வது எப்படி? வைரலான வீடியோ - பெரும் சிக்கலில் யூடியூபர்!
சட்டவிரோதமான பறவை, விலங்குகளை கொன்று சமையல் செய்த யூடியூபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மயில் கறி..
தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார். இவர் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் பாரம்பரிய முறையில் உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த சூழலில், பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனால் மயிலை கொல்வது சட்டவிரோதமான செயல் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்கலில் யூடியூபர்
இதை தொடர்ந்து, பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றத்தை உறுதி செய்த பின் அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடிப்போம் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில்,
பிரணாய் மயில் கறி வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கியுள்ளார். எனினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக சட்டவிரோதமான காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.