TTF வாசனை தொடர்ந்து சிக்கலில் யூடியூபர் வி.ஜே.சித்து - ஆதாரத்துடன் பாய்ந்த புகார்!
யூடியூபர் வி.ஜே. சித்து மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வி.ஜே.சித்து
அதிகவேகமாக பைக் ஓட்டினார் என்ற வழக்கில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கைதான பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் மீண்டும் கார் ஓட்டிய வழக்கில் நேற்று கைதாகினர்.அவரின் பைக் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது கார் ஓட்டியும் அவர் கைதாகி, அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இது தொடர்பாக பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வெளிவர துவங்கிய நிலையில், தற்போது மற்றுமொரு பிரபல யுடியூபரான விஜே சித்து மீது கவனம் திரும்பியது. Vj Siddhu என்ற யூடியூப் தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் சித்து. இந்த விவகாரத்தில் விஜே சித்து சிக்க முக்கிய காரணம்,
பாய்ந்த வழக்கு
vlog வீடியோ ஒன்றில் சித்து, போன் பேசி கொண்டே கார் ஓட்டுகிறார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சூழலில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அஜாக்கிரதையாக போனில் பேசிய படியே காரை இயக்கியதாக யூடியூபர் வி.ஜே. சித்து மீது சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் புகார் அளித்துள்ளார்.
விதிகளை மீறி அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட ஆதாரமும் வெளியானது. அதனை பார்த்து மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும் எனவும் வீடியோவில் ஆபாச வார்த்தைகள்,
இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறிய சித்து மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஷெரின் புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.