சிறுவர்களை வைத்து பாலியல் தொழில்; ஃபோனில் ஆபாச வீடியோ - சிக்கிய திவ்யா கள்ளச்சி!
யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் சீண்டல்
சோஷியல் மீடியாவில் கார்த்திக் எனும் பெயரை பயன்படுத்தி பிரபலமானவர் திவ்யா கள்ளச்சி. இவர் குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வருவதாக சித்ரா என்பவர் புகாரளித்திருந்தார்.
அதில், திவ்யா கள்ளச்சி மற்றும் கார்த்தி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரீல்ஸ் எடுப்பதற்காக வந்துள்ளனர். கார்த்தியின் நண்பரான சித்ரா அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் இணைந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற வீடியோவை எடுத்து தனக்கு அனுப்பி வைக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளார்.
திவ்யா கள்ளச்சி கைது
அதன்படி திவ்யா கள்ளச்சி, ஆனந்த் என்பவரின் உதவியுடன் இரண்டு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் படம் எடுத்து சித்ராவிற்கு அனுப்பியுள்ளார்.
இந்த வீடியோவை காட்டி திவ்யா கள்ளச்சியிடம் சித்ரா பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.