நூலகத்தின் மொட்டைமாடி; 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - சிறுவர்கள் கொடூரம்!
3 மாணவிகள் காதலின் பேரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சென்னை பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர் தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிய பெற்றோர் போலீஸில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரிக்கையில்,
இதில், மாணவியின் தோழிகளான அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 16 வயது மாணவி ஆகியோரும் மாயமானது தெரியவந்தது. 3 மாணவிகளையும்ஒரு ஐடிஐ மாணவர் மற்றும் சிறுமியின் நண்பர்களான 16 மற்றும் 17 வயது மாணவர்கள் ஆகியோர் சேர்ந்து, காதலிப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளனர்.
சிறுவர்கள் கைது
பெரம்பூரில் உள்ள அரசு நூலகம் ஒன்றின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தற்போது இதுதொடர்பாக 3 மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் யுகேஷ், கலிமுல்லா உட்பட மொத்தம் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் 3 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 3 மாணவிகளும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக, அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.