300 கி.மீ வேகத்தில் சாகச பயணம் - மோகத்தால் உயிரிழந்த 25 வயது யூடியூபர்!
பிரபல இளம் யூடியூபர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாகச பயணம்
உத்தரகாண்ட், டேராடூன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல இளம் யூடியூபர் அகஸ்தியா சென்(25). இவர் 'Pro Rider 1000' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தார். இவருக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

பைக் சாகச வீடியோக்கள் போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இவரிடம் கவாசகி (Kawasaki Ninja ZX10R - a 1,000 cc) அதிவேக சூப்பர் பைக் இருந்துள்ளது.
யூடியூபர் பலி
இந்நிலையில், ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்துள்ளார். அதில், தனது பாலோயர்களிடம் வீடியோவில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்வேன் எனக் கூறியுள்ளார்.

அப்போது அலிகர் பகுதியில் இவர் உச்ச வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, பைக் சாலை டிவைடரில் மோதி கோர விபத்துக்குள்ளானது. இதில் அவரது ஹெல்மெட் சுக்குநூறாக உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.