‘சிக்கலுக்கு மேல் சிக்கல்...’ - யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது

arrest tamilnadu-samugam- youtuber-maridoss
By Nandhini Dec 16, 2021 05:24 AM GMT
Report

சில நாட்கள் முன்பு இந்திய ராணுவ முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் பின்பு, யூடியூபர் மாரிதாஸை மற்றொரு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

போலி இ-மெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக 2020-ல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யூடியூபர் மாரிதாஸை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 04.04.2020ல் காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295 A, 505 ( 2), It act 67 என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக இன்று மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட இருக்கிறார்.

சென்னை புழல் சிறையிலிருந்து நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நெல்லை காவல்துறையினர் சென்னையிலிருந்து நெல்லைக்கு யூடியூபர் மாரிதாஸை அழைத்து வர இருக்கிறார்கள். 

‘சிக்கலுக்கு மேல் சிக்கல்...’ - யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது | Tamilnadu Samugam Youtuber Maridoss Arrest