சேலத்தில் பதுங்கியிருந்த யூடியூப் பிரபலம் திடீர் கைது - பரபரப்பு பின்னணி
சென்னை சேர்ந்த யூடியூப் பிரபலமான கே.ஜி.எஃப் விக்கி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
KGF
சென்னை வண்ணாரப்பேட்டை MC ரோட்டில் KGF என்ற பெயரில் துணிக்கடை இருக்கின்றது. இக்கடையை விக்னேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இவர் யூடியூப் சமூகவலைத்தளத்தில் நையாண்டியாக பேசி கடைக்கு விளம்பரம் செய்து பிரபலகமாக இருக்கின்றார்.
தொடர்ந்து பலரின் பேட்டிகளை அளித்துள்ள இவர் அவ்வப்போது ட்ரெண்டாகி இருக்கின்றார். தன் கடையில் பணிபுரிந்த ஒருவர் 1 லட்சம் ரூபாய் கையாடலாக செய்ததாக கூறப்படும் நிலையில், அவர் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.
கைது
சிறிது காலம் கழித்து அவர் மீண்டும் வேலை கேட்டு வந்த போது, அவரை உரிமையாளர் விக்கி அடியாள் வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த ஊழியர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலில், போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விக்கியை தேடி வந்துள்ளனர்.
விவகாரம் அறிந்த அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
சேலத்தில் பதுங்கி இருந்த விக்கி பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், அவரை தனிப்படை போலீசார் கைதுசெய்துள்ளார்கள். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.