குக் வித் கோமாளி பிரபலம்..பிஜிலி ரமேஷ் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Tamil Cinema Cooku with Comali Death Tamil Actors
By Swetha Aug 27, 2024 03:15 AM GMT
Report

பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

பிஜிலி ரமேஷ்

யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் முக பவானைகளால் ரசிகர்களை மெல்ல கவர்ந்தவர்.

குக் வித் கோமாளி பிரபலம்..பிஜிலி ரமேஷ் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி! | Youtube Fame Bijili Ramesh Passed Away

அவர் வந்த அந்த யூடியூப் வீடியோ படு வைரலான நிலையில் சினிமாவில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை தக்கவைத்தார்.

பிரச்சாரத்தில் மாரடைப்பால் துடிதுடித்த பிரபலம்; நடிகர் அருள்மணி காலமானார்!

பிரச்சாரத்தில் மாரடைப்பால் துடிதுடித்த பிரபலம்; நடிகர் அருள்மணி காலமானார்!

காலமானார் 

அதுமட்டுமின்றி தொலைகாட்சியில் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தார். ஆனால் மதுப்பழக்கம் காரணமாக இவரது உடல்நிலை மோசமடைந்தது.

குக் வித் கோமாளி பிரபலம்..பிஜிலி ரமேஷ் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி! | Youtube Fame Bijili Ramesh Passed Away

நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலைியல் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.