Sunday, May 11, 2025

பிரச்சாரத்தில் மாரடைப்பால் துடிதுடித்த பிரபலம்; நடிகர் அருள்மணி காலமானார்!

Tamil Cinema ADMK Death Tamil Actors
By Swetha a year ago
Report

பிரபல நடிகர் அருள்மணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

நடிகர் அருள்மணி

தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில், 90-க்கும் மேற்பட்ட படங்களில் அருள்மணி நடித்துள்ளார். 'அழகி', 'தென்றல்', 'தாண்டவக்கோனே' ஆகிய பல படங்களில் இவரது குணச்சித்திர நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். இவர் இயக்குநர் பயிற்சி பள்ளி ஒன்றையும் இவர் நடத்தி வந்தார்.

பிரச்சாரத்தில் மாரடைப்பால் துடிதுடித்த பிரபலம்; நடிகர் அருள்மணி காலமானார்! | Actor Arulmani Died Due To Heart Attack

இவருக்கு அரசியல் ஆர்வமும் உண்டு என்பதனால் அதிமுகவில் பணியாற்றி வந்தார். தற்போது வருகின்ற மக்களவை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் அதிமுகவுக்கு ஆதரவாக இவர் பல இடங்களில் வாக்கு சேகரித்து வந்தார்.

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி!

காலமானார்

இந்நிலையில், தீவிரப் பிரச்சாரத்திற்கு இடையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

பிரச்சாரத்தில் மாரடைப்பால் துடிதுடித்த பிரபலம்; நடிகர் அருள்மணி காலமானார்! | Actor Arulmani Died Due To Heart Attack

இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரையுலகினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.