பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவால் காலமானார்.
நடிகர் ஆர்.எஸ். சிவாஜி
பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர். சந்தானத்தின் மகன் ஆர்.எஸ்.சிவாஜி(66). நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமானார்.

பின்னர், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவர் பேசிய ‘சார், நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்’ வசனம் ரசிகர்களிடையே பிரபலமடைந்து
மறைவு
இப்போது வரை பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த ஆர்.எஸ்.சிவாஜி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று, இவரது நடிப்பில் ‘லக்கிமேன்’ திரைப்படம் வெளியாகி இருந்தது.
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan