பிரபலங்கள் இடம்பெற்ற விளம்பரங்கள் YouTube-லிருந்து நீக்கம் - காரணம் இதுதான்!
ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி விளம்பரங்கள் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது
விளம்பரங்கள் நீக்கம்
ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளம்பரங்கள் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பரங்கள் டீப் ஃபேக் செய்யறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் என கண்டறியப்பட்டது.
200 மில்லியன் பார்வையாளர்களை கடந்த இந்த போலி விளம்பரங்களில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான டைலர் ஸ்விஃப்ட், ஜோ ரோகன், ஸ்டீவ் ஹார்வி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முறைகேடு புகார்
இதுபோன்ற போலி விளம்பரங்கள் பெருகிவரும் முறைகேடு புகார்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
மேலும், தினமும் இதுபோன்ற விளம்பரங்களை கண்டறிந்து நீக்கும் பணியை தீவிரமாக செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.