அதென்ன 'குதிரைதாலி' போதை வைத்தியம்; குவியும் இளைஞர்கள் - பின்னணி என்ன?
குதிரைதாலி போதை வைத்தியத்தால் இளைனர்கள் கிரங்கும் சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குதிரைதாலி
திண்டுக்கல், கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அங்கு செல்லும் இளைஞர்கள் மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கவுஞ்சிக்கு முண்டியடிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. ஏனென்றால், அங்கு குதிரைதாலியை நுகரும் விபரீத ஆசையில் செல்வதாக கூறப்படுகிறது.
என்ன நிலவரம்?
குதிரைதாலி என்பது, இஞ்சி போன்று தரைக்குள் விளையும் ஒருவகை கிழங்கு. மூக்கால் உறிஞ்சுவது போன்று, குதிரைதாலியை இடித்து நுகர்கிறார்கள். உடனே, தலையில் கை வைத்து பித்துப் பிடித்தவர்கள் போன்று ஆக்சன் செய்கிறார்கள். இதனை தங்களது இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மூலிகை காப்பியும் சேல்ஸ் செய்யப்படுகிறது. மூலிகை காப்பியை அருந்தும் போது உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறுவதாக கூறப்படுகிறது.
அதற்கு 400 ரூபாய் வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். எந்தவொரு மருத்துவ ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் இதை நுகர்ந்தால் பக்க விளைவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.