ஆற்றில் அள்ள அள்ள வரும் தங்கம்; ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பாம்.. முண்டியடிக்கும் மக்கள்!

Pakistan Money Gold
By Sumathi Jan 06, 2025 01:30 PM GMT
Report

சிந்து நதியில் ரூ.60 ஆயிரம் கோடி தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொட்டிக் கிடக்கும் தங்கம்

பாகிஸ்தான், அட்டாக் மாவட்டத்தில் சிந்து நதி அமைந்துள்ளது. இங்கு தங்கம், பிற விலைமதிப்பற்ற தாதுக்கள் பெரிய அளவில் காணப்படுகின்றன. எனவே, இதனை சட்டவிரோத சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.

sindhu river

தொடர்ந்து அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு சட்டவிரோத சுரங்கத்தை தடை செய்தது. சிந்து மற்றும் காபூல் ஆறுகள் இணையும் இடத்தில் இந்த தங்கம் லட்சக்கணக்கான ஆண்டுகளாக குவிந்துள்ளது.

இந்த தங்கம் முக்கியமாக குளிர்கால மாதங்களில் நீர் மட்டம் குறையும் போது ஆற்று மணலுடன் கலந்த பிரகாசமான துகள்களாக தோன்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் சட்டவிரோதமாக தங்கத் துகள்களை சேகரிக்கச் செல்கின்றனர்.

பதவி விலகும் பிரதமர்; இந்த வாரமே ராஜினாமா? பரபரப்பு தகவல்!

பதவி விலகும் பிரதமர்; இந்த வாரமே ராஜினாமா? பரபரப்பு தகவல்!

சட்ட விரோதம்

இதில் கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் புவியியல் ஆய்வு அறிக்கையின்படி, சிந்து நதியில் பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பு இருக்கலாம். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

gold

மேலும், பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை அமைச்சகம், பிளேஸர் தங்கம் போன்ற விலைமதிப்பற்ற கனிமங்களிலிருந்து அரசாங்க கருவூலத்திற்கு நிறைய பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளது.