அரசு வேலை மாப்பிள்ளைதான் வேண்டுமாம்.. 11 ஆயிரம் இளைஞர்களை கதறவிட்ட பெண்கள்!

Karnataka Marriage
By Sumathi Nov 15, 2022 06:47 AM GMT
Report

விவசாய செய்யும் மணமகன் வேண்டாம் என பெண்கள் அளித்துள்ள விண்ணப்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரன் தேடுதல்

மண்டியா, ஆதிசுஞ்சனகிரி மடத்தில் ஒக்கலிகர் சமுதாய சங்க சார்பில் மாநாடு நடந்தது. அதில் அந்த சமுதாய ஆண்-பெண்களுக்கு ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.

அரசு வேலை மாப்பிள்ளைதான் வேண்டுமாம்.. 11 ஆயிரம் இளைஞர்களை கதறவிட்ட பெண்கள்! | Youths Flocked For Marriage Admission

இவர்கள் பெரிதும் விவசாயம் செய்பவர்கள் எனக் கூறப்படுகிறது. இதில் 12 ஆயிரம் பேர் தங்கள் பெயர், விவரங்களை குறிப்பிட்டு திருமணத்திற்கு பெண்கள் தேடி பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், 11,750 பேர் வரன் தேடி வருகின்றனர்.

 ஏமாற்றம்

ஆனால், அவர்களுக்கு போட்டியாக 250 இளம்பெண்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். இதனால் அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பெரும்பாலான பெண்கள் தனியார் நிறுவனம்,

அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் மணமகன் தான் வேண்டும் எனவும், விவசாயம் செய்பவர்கள் வேண்டாம் எனவும் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மண்டியா விவசாய பூமி என்பது குறிப்பிடத்தக்கது.