செல்போன் திருடிய இளைஞர்..அடித்தே கொன்ற மக்கள் - பதைபதைக்கும் காட்சிகள்!
செல்போன் திருடியதாக இரண்டு இளைஞர்களை கிராமத்தினர் கொடூரமாக தாக்கினர்.
திருடிய இளைஞர்
அசாம் மாநிலம், சிவசாகர் மாவட்டம் புகான் கிராமம் சலேகானில் உள்ள ஒரு வீட்டில் செல்போன் திருடுபோனதாக தகவல் ஒன்று கிடைத்தது. இதனையடுத்து, செல்போனை திருடியதாக பாலு கோலா, தாது கோயாலா ஆகிய இளைஞர்களை அங்குள்ள கிராமமக்கள் கம்பு, உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். அதன் பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் பாலு கோலா(27) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொன்ற மக்கள்
தாது கோயாலா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது சலேகானில் உள்ள ஜெம்ராமின் வீட்டில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிய வந்தது.
இந்த தாக்குதலில் பால்கி, மைனா கர்மாகர், டிக்கு கோயாலா, ஜெய்ராம், புய் மண்டல், ராஜு மாஜி, கமல் மற்றும் கரண் ஆகியோர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.