முன்னாள் காதலி; ஓட ஓட ஸ்பேனரால் அடித்தே கொன்ற கொடூரன் - வேடிக்கை பார்த்த மக்கள்!
முன்னாள் காதலியை ஒருவர் ஸ்பேனரால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
முன்னாள் காதலி
மும்பை மாநகரப் பகுதியில் பட்ட பகலில் ரோஹித் (29) என்பவர் ஆர்த்தி(22) என்னும் பெண்ணை அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மும்பை அருகே பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த கொடூரமான சம்பவத்தில்
தனது முன்னாள் காதலியை தொழில்துறை ஸ்பேனரால் பலமுறை தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சி தந்து வருகிறது. சிசிடிவியில் பதிவான காட்சியில், ரோஹித் ஆர்த்தியை துரத்துவதும்,
பின்னர் அவரை சாலையில் வீழ்த்தி கைவசம் வைத்திருந்த தொழிற்சாலை உபயோகத்துக்கான ஸ்பேனர் கொண்டு பெண்ணை சரமாரியாக தாக்குவதும் பதிவாகி உள்ளது. இதனை பலர் கண்டும்காணாதபடி கடந்து செல்ல, சிலர் எட்ட நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.
கொன்ற கொடூரன்
ஒரு சிலர் பெயருக்கு தடுக்க முயன்று, பின்னர் அச்சம் காரணமாக விலகிச் செல்கின்றனர். வெளியான அந்த நபர் ‘என்னை ஏன் இப்படி செய்தாய்?’ என்று கத்தியபடி அப்பெண்ணை மீண்டும் மீண்டும் தாக்குவதை ஒருவர் செல்போனில் எடுத்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
'
ஒரே இடத்தில் பணியாற்றிய இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், அப்பெண் திடீரென ஆண்ட உறவை சில நாட்களுக்கு முன்பு துண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்த இளைஞன் கொலைவெறித் தாக்குதலில் இறங்கியதாகவும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும், இப்படி ஒரு வெறி செயல் பலர் கண் முன்பாக ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை எவரும் தடுக்காதது காண்போரை அதிர வைத்துள்ளது. இதையே மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகங்கர் "இந்த சம்பவம் மனிதகுலத்திற்கு அவமானம்" என்று தெரிவித்துள்ளார்.