40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர்; நீண்ட நேர போராட்டம் - இறுதியில் நேர்ந்தது என்ன?
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 20 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்துளை கிணறு
டெல்லி, கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறு உள்ளது. இந்நிலையில், திடீரென அந்த கிணற்றுக்குள் ஒரு குழந்தை தவறி விழுந்தாக தகவல் பரவியது
இந்த தகவலை அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தவறி விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது குழந்தை அல்ல என்றும், 18 முதல் 20 வயதுடைய நபராகயிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
இதனையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் காவல்துறையினர் ஆகியோர் அந்த இளைஞரை மீட்கும் பணியை மேலும் துரிதப்படுத்தினர்.
இது குறித்து மீட்பு பணியில் ஈடுப்பட்ட தீயணைப்பு படை அதிகாரி ரவீந்தர் சிங் பேசியபோது, ஆழ்துளைக் கிணற்றுக்குள் அந்த நபர் தவறி விழுந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அவரது உடலை மீட்டுள்ளனர்.