300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த பெண் குழந்தை - மீட்பு பணிகள் தீவிரம்

Madhya Pradesh
By Thahir Jun 07, 2023 07:30 AM GMT
Report

மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் பெண் குழந்தை தவறி விழுந்த நிலையில் மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆழ்துளை கிணற்றில் பெண் குழந்தை

மத்திய பிரதேசத்தின் மாநிலம் செஹோர் மாவட்டம் முங்காலி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2.5 வயது பெண் குழந்தை அருகில் இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

இதையடுத்து குழந்தை விழுந்தது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

A girl child fell into a 300 feet bore well

தற்போது குழந்தை 50 ஆழத்தில் உள்ளதாகவும், குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருவதாக செஹோர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகள் தீவிரம் 

ஆழ்துளை கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டப்பட்டு குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் குழந்தையை பாதுகாப்பாக விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.