தவெக ஆண்டு விழா; விஜய்யின் வீட்டு வாசலில் காலணியை வீசிய நபர் - பரபரப்பு!
விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் திடீரென காலணியை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலணி வீச்சு
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று நடக்கிறது.
இதில், 95 மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், துணை தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 600 பேர் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். மற்ற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தொடக்க விழா
குறிப்பாக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில், விஜய் வீட்டில் திடீரென இளைஞார் ஒருவர் காலணியை வீசியுள்ளார்.
ஆண்டு விழாவுக்கு விஜய் கிளம்பி கொண்டிருந்தபோது, இந்த காலணி வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. பின், வீட்டிலிருந்த காவலாளிகள் விரைந்து சென்று,
அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இச்சம்பவம் காலையிலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.