மதம் மாறிவிடு இல்லைனா, உன் அந்தரங்க படங்களை...மாணவியை மிரட்டிய இளைஞர்!

Uttar Pradesh Crime Open AI
By Swetha May 23, 2024 12:23 PM GMT
Report

ஏஐ மூலம் உருவாக்கிய ஆபாச விடியோவை வைத்து கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் மிரட்டியுள்ளார்.

அந்தரங்க படங்கள்

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை காவல் நிலையத்தை நாடி புகார் அளித்துள்ளார். அதில், னது மகளை சிறுபான்மையினர் மதத்திற்கு மாறுமாறு இளைஞர் ஒருவர் மிரட்டுகிறார். கடந்த மே 7-ம் தேதி எனது மகள் வாட்ஸ் அப்பிற்கு ஹாய், ஹலோ என்ற மெசேஜ் வந்தது.

மதம் மாறிவிடு இல்லைனா, உன் அந்தரங்க படங்களை...மாணவியை மிரட்டிய இளைஞர்! | Youth Threatens A Girl With Deepfake Images

தெரியாத நபரிடம் இருந்து வந்த தகவலுக்கு என் மகள் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், அதே எண்ணில் இருந்து ஒரு இளைஞர் ஒருவர் பேசியுள்ளார். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அத்துடன் நீ சிறுபான்மையினர் மதத்திற்கு மாறினால் உன்னை நன்றாக வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் என் மகள் பதில் சொல்லாமல் போன் இணைப்பைத் துண்டித்துள்ளார்.இதையடுத்து, மே 19-ம் தேதி அதே எண்ணில் இருந்து என் மகளுக்கு ஆபாச செய்தி, ஆபாச வீடியோக்கள் வந்தன. இதை அவள் அழித்ததால் அந்த எண்ணில் இருந்து பேசிய இளைஞர், வீட்டுக்கு வந்து கடத்தி விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

காசுக்காக இப்படியா? உல்லாசமாய் இருந்த வீடியோ வைத்து 4 பேருடன் பெண் செய்த காரியம் !

காசுக்காக இப்படியா? உல்லாசமாய் இருந்த வீடியோ வைத்து 4 பேருடன் பெண் செய்த காரியம் !

மிரட்டிய இளைஞர்

இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்வேன் என்றும் மிரட்டி உள்ளார். மேலும், மதம் மாறாவிட்டால், ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு குறிப்பிடப்படுள்ளது.

மதம் மாறிவிடு இல்லைனா, உன் அந்தரங்க படங்களை...மாணவியை மிரட்டிய இளைஞர்! | Youth Threatens A Girl With Deepfake Images

இந்த புகாரின் பேரில், அவரது மகளுக்கு வந்த அழைப்பின் என்னை எண்ணை சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த பைசல் என்பவரது செல்போன் எண் என தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில்,

இந்த விவாகரத்தில் பைசலுடன் அவரது தந்தையும் உடன் சேர்ந்து கூட்டாளியாக செயல்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.