இன்ஸ்டாகிராமில் பழக்கம் ; ஒரு மாத தீவிர காதல் - ஜோடிக்கு நேர்ந்த சோகம்!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்த ஜோடி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர காதல்
கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு இளைஞர் மற்றும் இளம்பெண்ணின் ெரயில் முன் பாய்ந்த நிலையில் உடல் சிதறிய நிலையில் கண்டெடுத்தனர். இந்த தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அப்பகுதியில் விசாரித்த போது, ரெயில் வந்த நேரத்தில் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கட்டி அணைத்தபடி தண்டவாளத்தில் நின்றுகொண்டு இருந்த நேரத்தில் அவர்கள் மீது ரயில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்தனர் என சோகத்துடன் தெரிவித்தனர். இதன்படி,இருவரும் காதல் ஜோடியாக இருக்கலாம் என்று பொலிஸாருக்கு தெரியவந்தது.
இன்ஸ்டா ஜோடி
அதே சமயத்தில் பலியான ஜோடிகளின் முதலில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அந்த ஜோடியின் அடையாளம் தெரிந்ததோடு, தற்கொலைக்கான காரணமும் தெரியவந்துள்ளது. அதாவது இளைஞர் சந்தனத்தோப்பு பகுதியைச் சேர்ந்த அனந்து (18) என்றும், இளம்பெண் களமசேரி பகுதியைச் சேர்ந்த மீனாட்சி (18) என தெரிய வந்துள்ளது.
அனந்து பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மீனாட்சி 12 வகுப்பு படித்த முடித்துள்ளார். இருவருக்கும் ஒரு மாதம் முன்பு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலை வீட்டில் உள்ளவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என நினைத்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.