மகனை பிளாஸ்டிக் பையால் மூடி கொன்ற பெற்றோர் - கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி!

Attempted Murder Kanyakumari
By Vinothini Jul 23, 2023 10:49 AM GMT
Report

தம்பதியினர் தங்களது சொந்த மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் 40 வயதான இவர் எம்.இ., பி.எல். பட்டதாரி ஆவார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவருக்கும், தக்கலை மணலி பகுதியை சேர்ந்த சைலஜா என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளார்.

couple-murdered-their-son-and-committed-suicide

முரளிதரன் வேலையை விட்டு விட்டு நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவர்களின் வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த முரளிதரனின் தந்தை ஜன்னலை உடைத்து பார்த்துள்ளார். அப்பொழுது 4 கால்கள் தொங்குவது தெரிந்துள்ளது, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விசாரணை

இந்நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தல் இவரது பேரன் ஜீவா பாலிதீன் பையால் மூடப்பட்டு இருந்தார், ஒரு அறையில் முரளியும் மற்றொரு அறையில் சைலஜாவும் தூக்கில் தொங்கிகொண்டிருந்தனர். இதனை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், முரளிக்கு வேலை பறிபோனது அதனால் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

couple-murdered-their-son-and-committed-suicide

அங்கு சொந்த வீடு கட்டி வாழ்ந்து வந்தனர், அதுவரை நன்றாக இருந்த குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியம் ஆனார். இதனை சரி செய்ய மருத்துவமனைக்கு அலைந்தனர் ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

இதனால் மனா உளைச்சலில் இருந்த தம்பதியினர் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதனால் தனது மகனை பிளாஸ்டிக் பையை வைத்து மூச்சை அமுக்கி கொன்றுள்ளனர், பின்னர் அவர்களும் தற்கொலை செய்துகொண்டனர். வீட்டில் இருந்து ஒரு கடிதம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதில் பல லட்சம் ரூபாய் செலவழித்தும் தவமாய் பெற்ற மகனின் நோயை குணப்படுத்த முடியாததால் மனவேதனையில் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.