3 வயது மகனை கொல்வதற்கு ஆள் செட் பண்ண தாய் - லாவகமாக பிடித்த போலீசார்!

United States of America Crime
By Vinothini Jul 21, 2023 07:30 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

சொந்த மகனை கொல்வதற்காக தாய் ஒருவர் கூலிப்படையை நாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளம்

அமெரிக்காவில் கூலிக்கு கொலை செய்வதற்காக கூலி பணியாட்களை தேடி தரும் இணையதளங்கள் செயல்பட்டு வருகிறது. அதுபோல ராபர்ட் இன்ஸ் என்பவரும் ஒரு இணையதளத்தை இயக்கி வந்தார்,

women-tried-to-kill-her-3-years-old-son

இது பார்ப்பதற்கு கூலியாட்கள் தேடி தரும் இணையதளம் போன்று இருந்தாலும், நிஜத்தில் அதுபோன்ற செயல்களை கேலி செய்யும் தளமாக மாறியது. அந்த தளத்தின் வழக்கமான பயனர்களுக்கும் அது தெரியும் என்பதால், வழக்கம்போல விளையாட்டு போக்கிலே hitmanforhire.com என்ற அந்த தளம் இயங்கி வந்தது.

மகனை கொல்ல முயன்ற தாய்

இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் இளம் தாய் ஒருவர் அந்த தளத்தை அணுகி ’ஒப்பந்த கொலைகாரன் கிடைக்குமா?’ என்று கேட்டுள்ளார். இதற்கு ராபர்ட்டும் விளையாட்டாய் பதிலளித்திருக்கிறார். மேலும், அந்த பெண் தனது 3 வது மகனை கொலை செய்ய வேண்டும் என்று கூறி மகனின் புகைப்படம் மற்றும் அவரது அன்றாடம் செல்லும் இடங்கள் குறித்து தகவல் அளித்துள்ளார்.

women-tried-to-kill-her-3-years-old-son

இதனால் அதிர்ச்சியடைந்த இணையதள நபர் அனைத்தையும் போலீசிடம் கூறி புகாரளித்தார். பின்னர், காவல் அதிகாரி ஒருவரை கூலி பணியாளர் போல் அனுப்பி வைத்தனர். நேரில் சந்தித்தவரை 3000 அமெரிக்க டாலருக்கு பேரம் பேசி ஜாஸ்மின் சம்மதிக்க வைத்தார். அதன்பிறகு ஜாஸ்மினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், அந்த 3 வயது சிறுவனை பாதுகாப்பாக உறவினரிடம் ஒப்படைத்தனர்.