பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற கள்ளக்காதலனை கணவருடன் சேர்ந்து கொலை செய்த பெண்!
தகாத உறவில் இருந்த நபரை, பெண் கணவருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
பெங்களூர், நைஸ் ரோடு பாலம் அருகே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்டு விசாரித்ததில் கூலி வேலைசெய்யும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நிபாஷிஷ் பால் (32) என்பது தெரியவந்தது.
அதன் பின் விசாரணையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெயின்டர் கணேஷ் (32), அவர் மனைவி ரீனா (29), கணேஷின் நண்பர் பிஜாய் குமார் (28) ஆகியோரைக் கைதுசெய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘‘கணேஷ்-ரீனா தம்பதி நான்கு குழந்தைகளுடன், பெங்களூரில் வசித்துவந்தனர்.
பாலியல் தொழில்
குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணேஷ் அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், ரீனாவுக்கு அதே பகுதியில் தங்கியிருக்கும் நிபாஷிஷ் பாலுடன் உறவு ஏற்பட்டுள்ளது. மேலும், நிபாஷிஷ் பணம் சம்பாதிப்பதற்காக, ரீனாவைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு, அவரைத் தாக்கியிருக்கிறார்.
இது குறித்து ரீனா தன் கணவரிடம் கூறிய நிலையில், கணேஷ் தன்னுடைய மனைவி ரீனாவுடன் இணைந்து, நிபாஷிஷ் பால் வீட்டுக்கு வந்தபோது, விஷ மருந்து கலந்த உணவை அவருக்குக் கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொலைசெய்துள்ளனர். பின்னர், தன்னுடைய குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, கணேஷ் தன் நண்பர் பிஜய் குமாரை வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார்.
கொலை
சம்பவ இடத்துக்குவந்த பிஜய் குமார் நடந்ததையறிந்து, கணேஷுடன் இணைந்து, நிபாஷிஷ் பால் உடலைத் துணியால் சுற்றி, பைக்கில் எடுத்துக்கொண்டு,சாலையோரம் உடலை வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதையடுத்து, கணேஷ், ரீனா தம்பதி வீட்டைக் காலிசெய்துவிட்டு, சரக்கு வாகனத்தில் பொருள்களை ஏற்றிக்கொண்டு பெங்களூருவிலிருந்து
, 370 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவமோகா மாவட்டத்துக்குச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், சரக்கு வாகன டிரைவரின் தகவலின்படியும் அனைவரையும் கைதுசெய்திருக்கிறோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.